காவிய நாயகி கண்ணகிக்கு ஒரு கோவில்.

Posted by aranthairaja

காவிய நாயகி கண்ணகி

                             கற்புக்கரசி என்று சொன்னதும் சட்டென்று நினைவுக்கு வருபவள் கண்ணகி. இவளுக்கு தமிழக கேரளா எல்லையிலுள்ள மங்கள தேவியில் கோவில் உள்ளது. இங்கு கண்ணகி தெய்வமாகவே வணங்கப்படுகிறாள்.

இந்த கோவில் உருவான கதை.

                        மாதவியிடம் சேர்த்துவைத்த பொன், பொருளையெல்லாம் இழந்த கண்ணகியின் கணவன் கோவலன், மதுரைக்கு பொருள் தேட வந்தான். கண்ணகியின் மாணிக்கப் பரல்கள் கொண்ட காற்சிலம்பை விற்கச் சென்ற இடத்தில், 'அரசியின் காற்சிலம்பை திருடி வந்துவிட்டான் ' என்று குற்றம் சாட்டப்பட்டு, மனனின் காவலர்களால் கொலை செய்யப்பட்டான்.

                   வெகுண்டெழுந்த கண்ணகி பாண்டிய மன்னனிடம் முறையிட்டால். தனது மற்றொரு காற்சிலம்பை, மன்னனின் முன்பு தரையில் வீசி உடைத்தெறிந்து, அதில் உள்ள பரல்கள் மாணிக்கங்கள்  என்றும், பாண்டிமா தேவி கார்சிலம்பின் பரல்கள் முத்துக்கள் என்றும் கூறி, தனது கணவன் கள்வன் அல்ல என்பதை நிரூபித்தால். நீதி தவறிய மன்னன் உயிரை விடுகிறான். அதை பார்த்து பாண்டிமாதேவியும் உயிர் துறக்கிறாள்.

                 ஆனால் கோபம் தணியாத கண்ணகியின் கோப அக்னி மதுரை நகரையே தீக்கு இரையாக்கியது என்கிறார், சிலப்பதிகாரம் தந்த இளங்கோவடிகள்.

                 மதுரையை எரித்த பிறகு, மேற்கு திசை நோக்கி பயனமானால் கண்ணகி. அன்றைய சேரநாட்டின் மலைப்பகுதியான இன்றைய மேற்கு தொடர்ச்சி மலையை அடைந்து, அங்குள்ள வேங்கை மரத்தடியில் சோர்ந்துபோய்  அமர்ந்தால். 14  நாட்களுக்கு பிறகு, கொலைசெய்யப்பட்ட கோவலன் புஷ்க விமானத்தில் அங்குவந்து அவளை தன்னுடன் அழைத்துச் சென்றான். இதை பார்த்த மலைவாழ் மக்கள், ஒருமுறை மலைவளம் காணவந்த சேரன் செங்குட்டுவனிடம் அதுபற்றி கூறினார்கள். கண்ணகிபற்றி மேலும் அறிய ஆவல் கொண்ட செங்குட்டுவன், தனது அரசவை புலவர் சீத்தலை சாத்தனாரிடம் அதுபற்றி கேட்க... அவர் நடந்த சம்பவத்தை அரசனுக்கு விளக்கினார்.

                       கண்ணகியின் வரலாற்றை கேட்டு வியந்த செங்குட்டுவன், அவளுக்கு சிலைவடித்து ஒரு கோவிலும் எழுப்ப தீர்மானித்தான்.அதையொட்டி கண்ணகிக்கு சிலைவடிக்க இமயமலையிலிருந்து கல் கொண்டு வரப்பட்டது. கோவிலும் எழுப்பப்பட்டது. அந்த கோவில் தான் இன்றைய மங்கள தேவி கண்ணகி கோவில்.

                     தமிழக கேரள எல்லையில் கடல் மட்டத்திலிருந்து 4 ஆயிரத்து 380  அடி உயரத்தில் இக்கோவில் உள்ளது. கேரளா வணத்துறையின் கட்டுப்பாட்டில் இப்பகுதி உள்ளது.

                  சித்ரா பவுர்ணமி அன்று மட்டும் இந்த கோவிலுக்கு வந்து வணங்கி செல்லலாம். மற்ற நாட்களில் அனுமதி இல்லை.

                  தற்போது இந்த கோவில் சிதைந்து காணப்பட்டாலும், ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி அன்று மட்டும் பக்தர்கள் கூட்டத்தால் கலைகட்டிவிடுகிறது.

நன்றி தினத்தந்தி நாளிதழ்.


1 comments:

  1. Chitra said...

    புதிய தகவல். பகிர்வுக்கு நன்றி.

Post a Comment