V .A .O தேர்விற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

Posted by aranthairaja


                  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜூலை 21 -ம் தேதி 2653 கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான விளம்பரம் வெளியிட்டது.  ஆகஸ்ட் 20 -ம் தேதிவரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த 2653 காலியிடத்திற்கு உத்தேசமாக 11  இலட்சம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் அந்த காலியிடங்களின் எண்ணிக்கை மேலும் 831 இடங்கள் அதிகரித்துள்ளன என்று அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.


                 இதில் முக்கியமான செய்தி என்னவென்றால் ஏற்கனவே இப்பதவியின் தேர்விற்கு விண்ணப்பிக்காதவர்கள் இப்பொழுது விண்ணப்பிக்க அரசு மீண்டும் ஒரு வாய்ப்பு அளித்துள்ளது. வருகின்ற  28-12-2010 அன்றுவரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவை இல்லை என்றும் இச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


                   இதற்கான தகுதிகள் ஏதும் மாற்றப்படவில்லை. அதற்கான விவரங்கள் தேவைப்படுபவர்கள் இங்கே click  செய்யவும் அல்லது www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று   Recruitment  என்ற பட்டனை தேர்வு செய்து இயக்கவும். அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆகஸ்ட் மாதத்திற்கான விவரங்களே இப்போது விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


எது எப்படியோ  
முன்பே விண்ணப்பித்தவர்களுக்கு               
ஒரு நிம்மதி. அப்பாடா இப்பவாவது தேர்வு தேதிய சொன்னாங்களே...
 
விண்ணப்பிக்காதவர்களுக்கு                           

மீண்டும் ஒரு அறிய வாய்ப்பு...

அரசுக்கு                                                                                                                                    மீண்டும் ஒரு வருமான வாய்ப்பு.......................................................................


.
.
செய்தி உபயோகமாக இருந்தால் ஓட்டளித்து செல்லவும். குறை இருந்தால் commands ல் தெரிவிக்கவும். வாழ்த்துக்களுடன் ராஜ்...
அறந்தாங்கியிலிருந்து ...

Posted by aranthairaja

               எல்லோரும் எவ்வளவோ அழகா ப்ளாக் எழுதும்போது நாம் மட்டும் ஏன் மாதம் ஒண்ணுகூட எழுத முடியல அப்படின்னு யோசிச்சேன்.  சரி முதல்ல நம்ம ஊரபத்தி எழுதலாம்னு முடிவுபண்ணி உங்க எல்லோரையும் எங்க ஊருக்கு கூட்டிட்டு போகபோறேன். எல்லாரும் தயாரா இருந்துக்கோங்க... புறப்படலாமா ?.

                   புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இரண்டாவது பெரிய நகரம்தான் அறந்தாங்கி. இங்க வருவதற்கு சென்னை போன்ற பெரு நகரங்களிலிருந்து வருவதானால் நேராக திருச்சி வந்திருங்க. அங்கிருந்து நேரா புதுக்கோட்டைக்கு  ஒரு  மணிநேரத்துல வந்திரலாம்.  புதுக்கோட்டையில்  இருந்து  ஒரு மணிநேரத்துல அறந்தாங்கி வந்திரலாம்.

                      இப்போ திருச்சி விமான நிலையம்கூட பன்னாட்டு விமான நிலையமா மாத்திட்டாங்க. நீங்க அப்படியும் வரலாம். இல்ல இரயில் மூலமா வருவதா இருந்தா சேது, இராமேஸ்வரம் போன்ற விரைவு இரயில் மூலமாகவும் வரலாம். இந்த ஊர் பொருளாதாரத்தில்  பற்றாக்குறை உடைய ஊர்தான். ஆனாலும் இங்கு குறிப்பிட்டு சொல்லப்போனால் எப்படியும் ஐம்பது முதல் நூறு  கோடிஸ்வரர்கள் இருப்பார்கள். எனக்கு தெரியாமலும் நிறைய இருக்கலாம்.

              இங்கு  முக்கிய தொழில் விவசாயம்தான். அதுவும் அறந்தாங்கில கிடையாது. அதை சுற்றி உள்ள கிராமங்களில்தான்.  முக்கியமாக  அறந்தாங்கிக்கு எந்தவித சிறப்பு பெருமையும் கிடையாது.

             அறந்தாங்கியோட கிழக்கு திசைல கட்டுமாவடி(கடல்பகுதி). வடக்கு திசைல பட்டுக்கோட்டை, கும்பகோணம் போன்ற ஊர்களும், வடகிழக்கு  திசைல புதுக்கோட்டை, திருச்சி போன்ற நகரங்களும், மேற்கு திசைல காரைக்குடி, திண்டுக்கல், மதுரை போன்ற நகரங்களும், தென் திசைல இராமநாதபுறம் போன்ற ஊர்களும் உள்ளது.
     இங்கே சுற்றுலா தளம் என்று பார்த்தால் இங்கிருந்து இருபைத்தைந்து கிலோமீட்டர் தூரத்துல மனோகரா(அதுவும் தஞ்சாவூர் மாவட்டம்) என்ற இடம் உள்ளது. இது அழகான அமைதியான கடல்பகுதி. அலையில்லா கடல்கான விரும்புவோர் இங்கு வந்து படகு சவாரி செய்யலாம்.


       அறந்தாங்கியிலிருந்து 13 கிலோமீட்டர் தூரத்துல ஆவுடையார் கோவில் உள்ளது. இதற்க்கு நிறைய புராதான பெருமைகள் உண்டு.  அனேகமாக நீங்களும் இந்த வரலாறு அறிந்தவர்களாக இருக்கலாம்.

                  அதாவது மன்னன் குதிரை வாங்க கொடுத்த பணத்தில் அமைச்சராக இருந்த மாணிக்கவாசகர்  இந்த ஆவுடையார்கோவில் இருக்கும் திருப்பெருந்துறையில் இரவு தங்கி செல்லும்போது அன்று இரவு இறைவன் அவர் கனவில் வந்து இந்த இடத்தில் தனக்கு ஒரு ஆலயம் எழுப்பும் படி கட்டளையிட்டதாகவும் உடனே மாணிக்கவாசகர் பரி வாங்க(குதிரை) வைத்திருந்த செல்வத்தை வைத்து தானும் அடியவனாய் இருந்து கோவிலை கட்டிமுடித்து விட்டார்.

                    பிறகுதான் அவருக்கு தான் எச்செயலுக்காக செல்வம் கொண்டுவந்தோம் என்பதே நினைவில் வந்தது. அதே நேரம் குதிரை வாங்க சென்ற  அமைச்சர் அதை வேறுவிதமாக செலவுசெய்துவிட்டதாக அறிந்த மன்னன் குதிரைகளோடு அமைச்சர் வராவிட்டால் அமைச்சர் மாணிக்கவாசகரை கைது செய்து அழைத்து வரும்படி கட்டளையிட்டிருந்தார்.   இதை அறிந்த மாணிக்கவாசகர் இறைவனிடம்  முறையிட்டார்.  உடனே இறைவன் மன்னனுக்கு பாடம் புகட்ட எண்ணி காட்டில் இருந்த நரிகளை எல்லாம் ஒன்று திரட்டி அவைகளை பரிகளாக (குதிரைகளாக) மாற்றனார்.


                  பின்னர் மாணிக்கவாசகர் முன்னாள் தோன்றி உனக்கு தேவையான குதிரைகள் வெளியில் உள்ளன. அவைகளை நீ மன்னனிடம் சேர்த்துவிடு என்று பணித்ததாகவும் அதை அமைச்சர் அரிமத்திர பாண்டிய மன்னனிடம் கொண்டுசென்று சேர்கிறார். அதைகண்டு மகிழ்ந்த அரசன் அந்த குதிரைகளை தனது குதிரை லாயத்தில் உள்ள குதிரைகளோடு இந்த குதிரைகளையும் ஒன்றாக சேர்த்து அடைத்தார். இரவில் புதிய குதிரைகள் யாவும் மீண்டும் நரிகளாக மாறி அங்கே இருந்த குதிரைகள் யாவையும் கொன்றுவிட்டன.   பிறகு சில திருவிளையாடல்கள் நிகழ்ந்ததாகவும் மன்னன் மனம் மாறி மாணிக்கவாசகரிடம் மன்னிப்பு கேட்டதாகவும் இந்த ஆலயத்திற்கு வரலாற்று சிறப்புகள் உள்ளன.     

இங்கே உள்ள சிற்பங்களை காண அயல்நாடுகளிலிருந்து பலர் வந்து பார்த்து செல்கின்றனர். மேலும் நவகிரகங்கள் தங்களது துணைவியாருடன் காட்சிதருகின்றனர். ஒவ்வொரு சிற்பங்களும் உண்மையான உருவங்களாகவே காட்சிதருகின்றன.  இந்த ஆலயத்திற்கு மொத்தம் நான்கு பிரகாரங்கள் உள்ளன.


               இந்த ஆலயத்துக்கு இன்னுமொரு சிறப்பு என்னவென்றால் இந்த ஆலயத்தில் சிவனுக்கு கொடிமரம் கிடையாது. எதிரில் நந்தி கிடையாது. ஏன் இங்கே சிவலிங்கமோ அல்லது வேறு சிவன் சிலையோ கிடையாது. இங்கே இறைவன் ஐம்பூதங்களாய் காட்சிதருகிறார் என்பதால் ஐந்து வர்ண விளக்குகளால் இறைவனை காட்டும் ஒரு அற்புத காட்சியாகும்.  இந்த ஆலயத்தை காண வேண்டும்போல உள்ளதா ? இதோ இங்கே உள்ள இந்த இணைப்பை தொடரவும். இது மிக அற்புதமான நேரடி ஒளிபரப்பை போன்றது. பார்த்துவிட்டு இத்தொடர் உங்களை கவர்ந்திருந்தால் ஓட்டளித்து செல்லவும்.

http://www.view360.in/virtualtour/aranthangi
நீங்கள் ஆச்சர்யப்படும் வகையிலான முழுமையான காட்சிகள். மேலே Click  செய்யவும்.


இந்தியா வருகிறார் சீனப் பிரதமர் வென்ஜியாபோ

Posted by aranthairaja


பெய்ஜிங், டிச.9 (டிஎன்எஸ்) மூன்று நாள் பயணமாக 300-க்கும் அதிகமான தொழிலதிபர்கள் கொண்ட குழுவினருடன் அடுத்தவாரம் இந்தியா வரவிருக்கிறார் சீனப் பிரதமர் வென்ஜியாபோ. 2005-ம் ஆண்டுக்கு பின் இவர் இந்தியா வருவது இது 2-வது முறை.

சீனப் பிரதமரின் பயணம் இம்மாதம் 15ஆம் தேதி துவங்குகிறது. இந்த வருகையின் மூலம் இருதரப்பு தொழில் உறவில் மைல்கல் சாதனை படைக்கவிருப்பதாகவும், இரு நாடுகளுக்கும் இடையே நீடித்துவரும் பரஸ்பர நல்லுறவை மேம்படுத்துவதே சீன பிரதமர் இம்முறை இந்தியா வருவதன் நோக்கம் என இருதரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.எந்தெந்த துறைகளில் ஒத்துழைப்பைப் பெருக்குவது என்பது குறித்து பேச்சு நடத்துவது என சீனாவுக்கான இந்திய தூதர் எஸ்.ஜெய்சங்கர் சீன உயர் அதிகாரிகளுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இருநாடுகளும் பரஸ்பர பிரச்னைகளில் பிணக்கை குறைத்துக்கொண்டு நல்ல வர்த்தக வாய்ப்புக்களை பயன்படுத்திக்கொள்ள விரும்புகின்றன என ஜெய்சங்கர் நிருபரிடம் கூறினார். வங்கித்துறை உள்ளிட்ட பல துறைகளில் பரஸ்பரம் ஒத்துழைக்க பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகக்கூடும்.

ஆனால், இது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் இன்னும் நடைபெற்று வருகின்றன. அவை முடிந்ததும் என்னென்ன ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தெரியவரும். பிரதமர் மன்மோகன் சிங், வென்ஜியாபோ சந்திப்பு முக்கியமானதாகக் கருதபடுகிறது எனவும் அவர் தெரிவித்தார். (டிஎன்எஸ்)

நன்றி சென்னைஆன்லைன்.

ஒரு நெட் பாம் "விக்கிலீக்ஸ்" நன்மையா ? தீமையா?

Posted by aranthairaja

     அனேகமாக கடந்தவாரத்தில் கூகுளில் அதிகமானோரால்  தேடப்பட்ட வார்த்தை "விக்கிலீக்ஸ்"- ஆகத்தான் இருக்கமுடியும்.

                          இதன் விளைவு விக்கிலீக்ஸ் இணையத்தள ஸ்தாபகர் ஜூலியன் அசெஞ்சே தலைமறைவாகி இருக்கிறார். இன்டர்போலின் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைக் கைதாணை என்று கூறமுடியாது. இது அவரது நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்கு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல். ஆனால் தற்போது அந்த ஆணையில் சில திருத்தங்கள் செய்து அவரை கைது செய்ய கைதானை பிறப்பிக்க பட்டுள்ளது. அவர் தற்போது பிரிட்டனில் இருப்பதாக எண்ணுவதாக சில நாளேடுகளில் செய்தி வெளிவந்துள்ளன.

              இவர் இத்தனை பரபரப்புகளை பெற காரணம் என்ன?

ஒரு நாட்டின் இராஜ தந்திர இரகசியங்களை பகிரங்கமாக வெளியிட்டதுதான்.
           இரகசியங்கள் பகிரங்கப்படுத்தும்போது அதுவும் பயங்கரமாக இருக்கும்போது... அதுதான் இத்தனை பரபரப்பிற்கும் காரணம் . அதுவும் வல்லரசான அமெரிக்காவை குறிவைத்து நடத்தப்பட்டிருக்கும் இந்த தாக்குதலே இச்செய்தி காட்டுத்தீபோல் பரவக்காரணம்.
              இப்போது வெளியிட்ட தகவல்கல்போல இன்னும் பல இரகசிய தகவல்கள் இருப்பதாகவும் அதை விரைவில் வெளியிட இருப்பதாகவும் அவர்கள் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த வலைத்தளத்தை அமெரிக்க அரசு நேற்று இரவு முதல் தடைசெய்து ஆணை பிறப்பித்து தடைசெய்தது. ஆனால் அந்த வலைத்தளம் அடுத்த ஏழு மணிநேரத்தில் வேறொரு பெயரில் வெளிநாட்டில் ஒரு டொமைன் மூலமாக மறுபிறவி எடுத்துள்ளது. 

                             எது எப்படியோ சில ரகசியங்கள் அம்பலமாகும்போது அதை காண கேட்க ஆர்வமாக இருந்தாலும் ஒருநாள் அதில் நம்மைப்பற்றியும் சில தகவல்கள் வரலாம்.  . . .
 அப்போது பாதிக்கப்பட்டவர்களின் வலி என்னவென்று நாமும் அறிவோம்.