தகுதியற்றவனா இந்த தங்க நாயகன் ?

Posted by aranthairaja

                  "ககன் நரங்" இந்திய தங்க நாயகன்.  இந்திய அரங்கில்  இன்றைய ஹீரோ இவர்தான்.  நடந்து முடிந்த பத்தொன்பதாவது காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் நான்கு தங்கங்களை வென்று நமது பதக்க பட்டியலையும் உலக அரங்கில் நமது பெருமையையும் தங்கத்தால் அலங்கரித்தவர். 

              இவர் இந்த காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றதற்காக மட்டுமே புகழ் பெறவில்லை. இதற்கு முன்பே விளையாட்டு துறையில் ஆர்வமுள்ளவர்களால் முக்கியத்துவம் வாய்ந்தவராக நன்கு அறியப்பட்டவர்.  ஜெர்மனியின் முனிச் நகரில் நடந்த  உலக சாம்பியன்ஷிப் போட்டியின், 10 மீ., "ஏர் ரைபிள்' தனிநபர் பிரிவில் 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார்.  இதன்மூலம் வரும் 2012ல் லண்டனில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு முதல் இந்தியராக தகுதிபெற்றார். தற்போது காமன் வெல்த்  துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கு பெற்ற இந்திய வீரர்களில் ககன் நான்கு தங்கங்களை அள்ளி வந்து தங்கமகனாய் ஜொலிக்கிறார்.

      ஆனால் இரண்டு மாதங்களுக்கு முன்பு  இந்த காமன்வெல்த் போட்டியில் கலந்துகொள்ளப்போவதில்லை என்ற மனநிலையில் ககன் நரங் இருப்பதாக சில பத்திரிகைகளில் செய்திகள் பரவலாக இருந்தது.  அதற்கு காரணம் நம்மில் சிலர்தான் அறிவர்.  ஒவ்வொரு ஆண்டும்  இந்திய விளையாட்டு அரங்கில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளுக்கு "ராஜிவ் கேல் ரத்னா', அர்ஜுனா விருதுகள் வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான "கேல் ரத்னா' விருதை, பி.டி.உஷா தலைமையிலான தேர்வுக் குழு சமீபத்தில் தேர்வு செய்தது.  இவ்விருதுக்கு தற்போது ஒரு தங்கம் ஒரு வெள்ளி பதக்கம் பெற்றுத்தந்த பாட்மின்டன் நட்சத்திரம் செய்னா நேவலை தேர்வு செய்தது.  இதன்மூலம் இவ்விருதுக்காக காத்திருந்த ககன் நரங் பெரும் ஏமாற்றம் அடைந்தார்.  ஏனென்றால் தொடர்ந்து மூன்றாவது முறையாக தவிர்க்கப்பட்டதுதான் காரணம்.

அநேகமாய் வரும் ஆண்டுக்கான ராஜீவ் கேல் ரத்னா  விருது உறுதி செய்யப்பட்டிருக்கும். தேர்வுக்குழுவினரே   இந்த ஆண்டுக்கான கேல் ரத்னா' விருதை பெற ககன் நரங்கிற்கு இந்த தகுதி போதும் என்றே எண்ணுகிறோம்.