அறந்தாங்கியிலிருந்து ...

Posted by aranthairaja

               எல்லோரும் எவ்வளவோ அழகா ப்ளாக் எழுதும்போது நாம் மட்டும் ஏன் மாதம் ஒண்ணுகூட எழுத முடியல அப்படின்னு யோசிச்சேன்.  சரி முதல்ல நம்ம ஊரபத்தி எழுதலாம்னு முடிவுபண்ணி உங்க எல்லோரையும் எங்க ஊருக்கு கூட்டிட்டு போகபோறேன். எல்லாரும் தயாரா இருந்துக்கோங்க... புறப்படலாமா ?.

                   புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இரண்டாவது பெரிய நகரம்தான் அறந்தாங்கி. இங்க வருவதற்கு சென்னை போன்ற பெரு நகரங்களிலிருந்து வருவதானால் நேராக திருச்சி வந்திருங்க. அங்கிருந்து நேரா புதுக்கோட்டைக்கு  ஒரு  மணிநேரத்துல வந்திரலாம்.  புதுக்கோட்டையில்  இருந்து  ஒரு மணிநேரத்துல அறந்தாங்கி வந்திரலாம்.

                      இப்போ திருச்சி விமான நிலையம்கூட பன்னாட்டு விமான நிலையமா மாத்திட்டாங்க. நீங்க அப்படியும் வரலாம். இல்ல இரயில் மூலமா வருவதா இருந்தா சேது, இராமேஸ்வரம் போன்ற விரைவு இரயில் மூலமாகவும் வரலாம். இந்த ஊர் பொருளாதாரத்தில்  பற்றாக்குறை உடைய ஊர்தான். ஆனாலும் இங்கு குறிப்பிட்டு சொல்லப்போனால் எப்படியும் ஐம்பது முதல் நூறு  கோடிஸ்வரர்கள் இருப்பார்கள். எனக்கு தெரியாமலும் நிறைய இருக்கலாம்.

              இங்கு  முக்கிய தொழில் விவசாயம்தான். அதுவும் அறந்தாங்கில கிடையாது. அதை சுற்றி உள்ள கிராமங்களில்தான்.  முக்கியமாக  அறந்தாங்கிக்கு எந்தவித சிறப்பு பெருமையும் கிடையாது.

             அறந்தாங்கியோட கிழக்கு திசைல கட்டுமாவடி(கடல்பகுதி). வடக்கு திசைல பட்டுக்கோட்டை, கும்பகோணம் போன்ற ஊர்களும், வடகிழக்கு  திசைல புதுக்கோட்டை, திருச்சி போன்ற நகரங்களும், மேற்கு திசைல காரைக்குடி, திண்டுக்கல், மதுரை போன்ற நகரங்களும், தென் திசைல இராமநாதபுறம் போன்ற ஊர்களும் உள்ளது.
     இங்கே சுற்றுலா தளம் என்று பார்த்தால் இங்கிருந்து இருபைத்தைந்து கிலோமீட்டர் தூரத்துல மனோகரா(அதுவும் தஞ்சாவூர் மாவட்டம்) என்ற இடம் உள்ளது. இது அழகான அமைதியான கடல்பகுதி. அலையில்லா கடல்கான விரும்புவோர் இங்கு வந்து படகு சவாரி செய்யலாம்.


       அறந்தாங்கியிலிருந்து 13 கிலோமீட்டர் தூரத்துல ஆவுடையார் கோவில் உள்ளது. இதற்க்கு நிறைய புராதான பெருமைகள் உண்டு.  அனேகமாக நீங்களும் இந்த வரலாறு அறிந்தவர்களாக இருக்கலாம்.

                  அதாவது மன்னன் குதிரை வாங்க கொடுத்த பணத்தில் அமைச்சராக இருந்த மாணிக்கவாசகர்  இந்த ஆவுடையார்கோவில் இருக்கும் திருப்பெருந்துறையில் இரவு தங்கி செல்லும்போது அன்று இரவு இறைவன் அவர் கனவில் வந்து இந்த இடத்தில் தனக்கு ஒரு ஆலயம் எழுப்பும் படி கட்டளையிட்டதாகவும் உடனே மாணிக்கவாசகர் பரி வாங்க(குதிரை) வைத்திருந்த செல்வத்தை வைத்து தானும் அடியவனாய் இருந்து கோவிலை கட்டிமுடித்து விட்டார்.

                    பிறகுதான் அவருக்கு தான் எச்செயலுக்காக செல்வம் கொண்டுவந்தோம் என்பதே நினைவில் வந்தது. அதே நேரம் குதிரை வாங்க சென்ற  அமைச்சர் அதை வேறுவிதமாக செலவுசெய்துவிட்டதாக அறிந்த மன்னன் குதிரைகளோடு அமைச்சர் வராவிட்டால் அமைச்சர் மாணிக்கவாசகரை கைது செய்து அழைத்து வரும்படி கட்டளையிட்டிருந்தார்.   இதை அறிந்த மாணிக்கவாசகர் இறைவனிடம்  முறையிட்டார்.  உடனே இறைவன் மன்னனுக்கு பாடம் புகட்ட எண்ணி காட்டில் இருந்த நரிகளை எல்லாம் ஒன்று திரட்டி அவைகளை பரிகளாக (குதிரைகளாக) மாற்றனார்.


                  பின்னர் மாணிக்கவாசகர் முன்னாள் தோன்றி உனக்கு தேவையான குதிரைகள் வெளியில் உள்ளன. அவைகளை நீ மன்னனிடம் சேர்த்துவிடு என்று பணித்ததாகவும் அதை அமைச்சர் அரிமத்திர பாண்டிய மன்னனிடம் கொண்டுசென்று சேர்கிறார். அதைகண்டு மகிழ்ந்த அரசன் அந்த குதிரைகளை தனது குதிரை லாயத்தில் உள்ள குதிரைகளோடு இந்த குதிரைகளையும் ஒன்றாக சேர்த்து அடைத்தார். இரவில் புதிய குதிரைகள் யாவும் மீண்டும் நரிகளாக மாறி அங்கே இருந்த குதிரைகள் யாவையும் கொன்றுவிட்டன.   பிறகு சில திருவிளையாடல்கள் நிகழ்ந்ததாகவும் மன்னன் மனம் மாறி மாணிக்கவாசகரிடம் மன்னிப்பு கேட்டதாகவும் இந்த ஆலயத்திற்கு வரலாற்று சிறப்புகள் உள்ளன.     

இங்கே உள்ள சிற்பங்களை காண அயல்நாடுகளிலிருந்து பலர் வந்து பார்த்து செல்கின்றனர். மேலும் நவகிரகங்கள் தங்களது துணைவியாருடன் காட்சிதருகின்றனர். ஒவ்வொரு சிற்பங்களும் உண்மையான உருவங்களாகவே காட்சிதருகின்றன.  இந்த ஆலயத்திற்கு மொத்தம் நான்கு பிரகாரங்கள் உள்ளன.


               இந்த ஆலயத்துக்கு இன்னுமொரு சிறப்பு என்னவென்றால் இந்த ஆலயத்தில் சிவனுக்கு கொடிமரம் கிடையாது. எதிரில் நந்தி கிடையாது. ஏன் இங்கே சிவலிங்கமோ அல்லது வேறு சிவன் சிலையோ கிடையாது. இங்கே இறைவன் ஐம்பூதங்களாய் காட்சிதருகிறார் என்பதால் ஐந்து வர்ண விளக்குகளால் இறைவனை காட்டும் ஒரு அற்புத காட்சியாகும்.  இந்த ஆலயத்தை காண வேண்டும்போல உள்ளதா ? இதோ இங்கே உள்ள இந்த இணைப்பை தொடரவும். இது மிக அற்புதமான நேரடி ஒளிபரப்பை போன்றது. பார்த்துவிட்டு இத்தொடர் உங்களை கவர்ந்திருந்தால் ஓட்டளித்து செல்லவும்.

http://www.view360.in/virtualtour/aranthangi
நீங்கள் ஆச்சர்யப்படும் வகையிலான முழுமையான காட்சிகள். மேலே Click  செய்யவும்.










15 comments:

  1. பனித்துளி சங்கர் said...

    ஊரின் சிறப்பை மிகவும் நேர்த்தியாக பதிவு செய்து இருக்கிறீர்கள் அருமை . தொடர்ந்து எழுதுங்கள் . பகிர்வுக்கு நன்றி

  2. பனித்துளி சங்கர் said...

    நண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இயன்றால் உங்களது மறுமொழிப்பெட்டியில் உள்ள Word verification -ஐ நீக்கி விடவும் அவ்வாறு செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . புரிதலுக்கு நன்றி !

  3. aranthairaja said...

    Word verification - நீக்கிவிட்டேன் நண்பரே. தங்களின் அன்பான அறிவுரைக்கு நன்றிகள். இதுபோல் அவ்வப்போது சில அறிவுரைகளை எதிர்பார்கிறேன் ஏன் வலைப்பூவை மேம்படுத்திக்கொள்ள...

  4. NKS.ஹாஜா மைதீன் said...

    வருக நண்பரே......
    தமிழ்மணம், தமிழ் 10 ஆகியவற்றில் உறுப்பினர் ஆகிவிட்டீர்களா?தொடர்ந்து எழுதுங்கள்......

  5. aranthairaja said...

    நன்றிகள் பல...
    நிச்சயம் தொடருகிறேன் தோழரே...

  6. ரஹீம் கஸ்ஸாலி said...

    அட நம்ம ஏரியாவிலிருந்து இன்னொரு ஆள். வருக நண்பரே...கலக்குங்கள். நமக்கு ஊர் அரசர்குளம்.
    http://ragariz.blogspot.com.

  7. aranthairaja said...

    எவ்வளவுபேர் படிச்சாலும் நம்ம ஊர்காரர் படிசிட்டாருன்னு தெரியும்போது ஒரு சந்தோசம் வருது பாருங்க... அதுதாங்க மண்வாசனைன்னு சொல்லுறது. நன்றி நண்பரே...

  8. மாணவன் said...

    உங்களின் இந்த ஆன்மீக பயணக் கட்டுரை தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்

    பகிர்வுக்கு நன்றி

    தொடரட்டும் உங்கள் பணி

  9. சே.ஆதம் பாவா said...

    எம் ஊர்ப்பகுதியில் இருந்து எழுதவந்தது இருக்கிறீர்கள் இந்த துறையில் வெற்றிபெற வாழ்த்துக்கள்
    அறந்தாங்கி என்கிற ஊரின் பெயர்காரணம் தெரிந்தால் எங்களோடு பகிர்ந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்

  10. ரஹீம் கஸ்ஸாலி said...
    This comment has been removed by the author.
  11. ரஹீம் கஸ்ஸாலி said...
    This comment has been removed by the author.
  12. புரியவில்லை said...

    wav....yaaru sir neenga...?

  13. Unknown said...

    மச்சான் ஆரம்பிசுட்டியா சும்மாவே நிறுத்தமாட்ட இதுல பிளாக்குன்னா சொல்லவே தேவையில்ல கலக்கு.

  14. Unknown said...

    அறந்தாங்கிக்கு எந்த சிறப்பும் கிடையாதா மூவேந்தர்கள் அங்கதானே ஊர் சுத்திக்கிட்டு இருந்தாங்க (பகுரு ,சென்,ராஜ்) அது சிறப்பு இல்லியா

  15. Unknown said...

    excellent

Post a Comment