இந்தியா வருகிறார் சீனப் பிரதமர் வென்ஜியாபோ

Posted by aranthairaja


பெய்ஜிங், டிச.9 (டிஎன்எஸ்) மூன்று நாள் பயணமாக 300-க்கும் அதிகமான தொழிலதிபர்கள் கொண்ட குழுவினருடன் அடுத்தவாரம் இந்தியா வரவிருக்கிறார் சீனப் பிரதமர் வென்ஜியாபோ. 2005-ம் ஆண்டுக்கு பின் இவர் இந்தியா வருவது இது 2-வது முறை.

சீனப் பிரதமரின் பயணம் இம்மாதம் 15ஆம் தேதி துவங்குகிறது. இந்த வருகையின் மூலம் இருதரப்பு தொழில் உறவில் மைல்கல் சாதனை படைக்கவிருப்பதாகவும், இரு நாடுகளுக்கும் இடையே நீடித்துவரும் பரஸ்பர நல்லுறவை மேம்படுத்துவதே சீன பிரதமர் இம்முறை இந்தியா வருவதன் நோக்கம் என இருதரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



எந்தெந்த துறைகளில் ஒத்துழைப்பைப் பெருக்குவது என்பது குறித்து பேச்சு நடத்துவது என சீனாவுக்கான இந்திய தூதர் எஸ்.ஜெய்சங்கர் சீன உயர் அதிகாரிகளுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இருநாடுகளும் பரஸ்பர பிரச்னைகளில் பிணக்கை குறைத்துக்கொண்டு நல்ல வர்த்தக வாய்ப்புக்களை பயன்படுத்திக்கொள்ள விரும்புகின்றன என ஜெய்சங்கர் நிருபரிடம் கூறினார். வங்கித்துறை உள்ளிட்ட பல துறைகளில் பரஸ்பரம் ஒத்துழைக்க பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகக்கூடும்.

ஆனால், இது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் இன்னும் நடைபெற்று வருகின்றன. அவை முடிந்ததும் என்னென்ன ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தெரியவரும். பிரதமர் மன்மோகன் சிங், வென்ஜியாபோ சந்திப்பு முக்கியமானதாகக் கருதபடுகிறது எனவும் அவர் தெரிவித்தார். (டிஎன்எஸ்)

நன்றி சென்னைஆன்லைன்.

0 comments:

Post a Comment