ஒரு நெட் பாம் "விக்கிலீக்ஸ்" நன்மையா ? தீமையா?

Posted by aranthairaja

     அனேகமாக கடந்தவாரத்தில் கூகுளில் அதிகமானோரால்  தேடப்பட்ட வார்த்தை "விக்கிலீக்ஸ்"- ஆகத்தான் இருக்கமுடியும்.

                          இதன் விளைவு விக்கிலீக்ஸ் இணையத்தள ஸ்தாபகர் ஜூலியன் அசெஞ்சே தலைமறைவாகி இருக்கிறார். இன்டர்போலின் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைக் கைதாணை என்று கூறமுடியாது. இது அவரது நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்கு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல். ஆனால் தற்போது அந்த ஆணையில் சில திருத்தங்கள் செய்து அவரை கைது செய்ய கைதானை பிறப்பிக்க பட்டுள்ளது. அவர் தற்போது பிரிட்டனில் இருப்பதாக எண்ணுவதாக சில நாளேடுகளில் செய்தி வெளிவந்துள்ளன.

              இவர் இத்தனை பரபரப்புகளை பெற காரணம் என்ன?

ஒரு நாட்டின் இராஜ தந்திர இரகசியங்களை பகிரங்கமாக வெளியிட்டதுதான்.
           இரகசியங்கள் பகிரங்கப்படுத்தும்போது அதுவும் பயங்கரமாக இருக்கும்போது... அதுதான் இத்தனை பரபரப்பிற்கும் காரணம் . அதுவும் வல்லரசான அமெரிக்காவை குறிவைத்து நடத்தப்பட்டிருக்கும் இந்த தாக்குதலே இச்செய்தி காட்டுத்தீபோல் பரவக்காரணம்.
              இப்போது வெளியிட்ட தகவல்கல்போல இன்னும் பல இரகசிய தகவல்கள் இருப்பதாகவும் அதை விரைவில் வெளியிட இருப்பதாகவும் அவர்கள் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த வலைத்தளத்தை அமெரிக்க அரசு நேற்று இரவு முதல் தடைசெய்து ஆணை பிறப்பித்து தடைசெய்தது. ஆனால் அந்த வலைத்தளம் அடுத்த ஏழு மணிநேரத்தில் வேறொரு பெயரில் வெளிநாட்டில் ஒரு டொமைன் மூலமாக மறுபிறவி எடுத்துள்ளது. 

                             எது எப்படியோ சில ரகசியங்கள் அம்பலமாகும்போது அதை காண கேட்க ஆர்வமாக இருந்தாலும் ஒருநாள் அதில் நம்மைப்பற்றியும் சில தகவல்கள் வரலாம்.  . . .
 அப்போது பாதிக்கப்பட்டவர்களின் வலி என்னவென்று நாமும் அறிவோம்.

0 comments:

Post a Comment