தீபாவளி

Posted by aranthairaja
நகரங்களில் குடிபெயர்ந்தவர்களின் ஒரு வருட சேமிப்பு...

வறியவர்களுக்கு சென்ற வருட கடனை அடைத்த மகிழ்ச்யோடு புதியகடன்காரர்களாய் பதவியேற்பு...

குழந்தைகளுக்கு புத்தாடை, வெடி, பலகாரம்....

மாணவர்களுக்கு நிறைய பணம் பள்ளிக்கூட விடுமுறையோடு...

கட்டாய எண்ணைக்குளியல்....  

வீட்டில் செய்த எண்ணெய்ப்பலகாரம்... 

பட்டென வெடித்துச்சிதறும் வெடிச்சத்தம்....

தீபாவளிக்குப்பின்  வெடிச்சத்தமாய் சிதறும் பணமும், மனமும்....

நிஜமாய் சொன்னால் என் குடும்பத்தவர் மகிழ்விற்காக நான் விரும்பி சுமக்கும் பாரம்....

0 comments:

Post a Comment