அறிமுகம் - புதிய ஆகாஷ் -2 டேப்லட் பிசி ரூ.1130

Posted by aranthairaja


           குறைந்த விலையில் டேப்லட் பிசி வழங்கி ஆச்சர்யத்தில் ஆழ்த்திய ஆகாஷ் டேப்லட் பிசி தற்போது தனது மேம்படுத்தப்பட்ட அடுத்த பதிப்பை வெளியிட்டுள்ளது. இதனை நமது மதிப்பிற்குரிய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அறிமுகம் செய்துவைத்தார்.

          மேம்படுத்தப்பட்ட இவ்வகை ஆகாஷ் டேப்லட் பிசியானது முதலில் மாணவர்களுக்கு அரசின் 50 % மானிய விலையான ரூ.1130 கு கிடைக்கும் என்பதே இதன் சிறப்பாகும். இந்தியாவில் மிகக்குறைந்த விலையில் கிடைக்கும் டேப்லட் பிசி இதுவேயாகும். முதலில் இஞ்சினியரிங் கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்கலைகழக மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. இதன் பிராசசர் வேகம் 1 Ghz , 512MB Ram , மற்றும் 7  இன்ச்  தொடுதிரை வசதியும் 3 மணிநேர பேட்டரி பவர் வசதியும் கொண்டதாக உள்ளது.

இந்த ஆகாஷ்-2 வை IIT பாம்பே C - CAD -ன் ஆதரவுடன் உருவாக்கியுள்ளது.

         இந்த ஆகாஷ் 2 - ன் அடக்க விலை ரூ.2263 . இதை அரசு இவ்விலைக்கு பெற்று அதற்கு 50 % மானியம் வழங்கி ரூ.1130  -கு மாணவர்களுக்கு வழங்குகிறது என்று டேட்டா வைன்ட் -ன் CEO  திரு சுனித் தூளி தெரிவித்துள்ளார்.

          முதலில் ஒருலட்சம் டேப்லட் பிசிக்கல் பொறியியல் கல்லுரி மாணவர்கள் மற்றும் பல்கலை மாணவர்களுக்கும் வழங்கப்படும். பின் மற்ற மாணவர்களுக்கு வழங்கப்படும். அடுத்த 5 அல்லது 6 ஆண்டுகளில் சுமார் 22 கோடி மாணவர்களுக்கு இச்சாதனம் வழங்கக்கப்படும்.

           முதல் கட்டமாக இவ்வாரத்தில் 20000 டேப்லட் பிசி வழங்கப்பட உள்ளது. இது லினக்ஸ் இயங்கு தளத்திலும் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comments:

  1. திண்டுக்கல் தனபாலன் said...

    மேம்படுத்தப்பட்ட இந்த பதிப்பு எப்படி உள்ளது எனப்பார்க்க வேண்டும்... தகவலுக்கு நன்றி...

Post a Comment