கார்பைடு மாம்பழம்(carbide mangoes) - ஒரு கண்ணோட்டம்.

Posted by aranthairaja

கார்பைடு மாம்பழம்-CARBIDE MANGOES



முக்கனிகளில் முதல்கனி மா

ஏனெனில் வைட்டமின் ஏ,பி,சி,தையாமின், கால்சியம், இரும்புசத்து,
மெக்னிசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம் இன்னும் சொல்லி கொண்டே போக முடியம் அந்த அளவிற்கு உயிர்ச்சத்துக்கள் அடங்கிய தாது பொருட்கள் உள்ளடக்கியது.

இவ்வளவு அற்புதங்கள் அடங்கிய அமிர்தகனி ஆனால் நமது வணிகர்கள் வஞ்சனையோடு கால்சியம் கார்பைடு கல் கொண்டு சுட்டுவிடுகிறார்கள்.

பாஸ்ட்புட் கலாச்சாரத்தில் பழகள் கூட விதிவிலக்கு இல்லை
காசில் மட்டுமே கண்.

கால்சியம் கார்பைடுகள் தங்க நகை பட்டறைகளிலும்
தொழில்ற்சாலைகளிலும் முக்கியமாக வெல்டிங் பட்டறைகளிலும் அதிக வெப்பத்தை உருவாக்க பயன்படுத்தும் ரசாயன பொருள்

இதில் சில கிலோ மட்டும் ஒரு அறையில் திறந்த நிலையில் வைத்திருந்தால மறுநாள் அந்த அறையின் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து இருக்கும்

அந்த அளவிற்கு வெப்பத்தை வெளிப்படுத்தும். இந்த கற்கலை சிறுசிறு பொட்டலமாக போட்டு காய்நிலையில் உள்ள பப்பாளி , சப்போட்டா, வாழை, சாத்துக்குடி, ஆரஞ்சு , மாகாய் போன்றவைகளுக்கு இடையில் போட்டுவிடுவார்கள்.

பல மணி நேரகளில் அனைத்தும் பழுத்தது போல் காட்சி அளிக்கும். அதாவது பழுத்ததுபோல் மஞ்சள் நிறம் கொண்டியிருக்கும்.
பொதுவாக சேலம் போன்ற ஊர்களிலிருந்து லாரிகளில் மாங்காய்களை ஏற்ற அதன் நடுவே கால்சியம் கார்பைடு கற்கள் போட்டுவிடுவார்கள்

அவை விற்பனை செய்யப்படும் இடங்களில் பழம்போல் காட்சியுடன் இறக்குவார்கள். இதுபோன்ற கால்சியம் கார்பைடு கல் மூலம் பழுக்கவைக்கப்படும் பழங்களை சாப்பிடுவதால்

அவை நம் உடலுக்குள் சென்ற உடல் உஷ்னத்தை பல மடகு அதிகரிக்க செய்துவிடுகிறது.( ஏற்கனவே மாம்பழம் சூடு இதுவேறையா?)

இதனால் புட்பாய்சன் அறிகுறிகளன வாய்புண், , வயிற்றுப்போக்கு, வயிற்று அழற்ச்சி,கர்ப்பிணிகளுக்கு கருக்கலைப்பு ஏற்படும் அபாயம் அதிகரிப்பு

நரம்பு மண்டலம் பாதிப்பு மூச்சு திணறல் போன்றவை ஏற்படும்.



நகராட்சி வாகனத்தில் அழிக்கபடுகிறது


கால்சியம் கார்பைடு கல் மூலம் பழுக்கவைத்த மாம்பழகளை கண்டறியும் வழிகள்

1)  முகர்ந்தால் மாம்பழ வாசனை இருக்காது.


2)  வெண் படிவம் இருக்கும்.


3)  மேலே பழுத்தது போல் காட்சியளிக்கும், வெட்டினால் செங்கனியாக       இருக்கும்.


4)  ருசி இருக்காது .

இதுபோன்ற தவறுகள் செய்பவர்களுக்கு தற்பொழுது உள்ள உணவு கலப்பட தடை சட்டத்தை காட்டிலும்

ஆகஸ்ட் 5ம் தேதி முதல் அமுலுக்கு வரஇருக்கும் உணவு பாதுகாப்பு தரக்கட்டுப்பாட்டு சட்டத்தில் கடும் சிறை தண்டனையும் அபராதமும் உண்டு


 நன்றி.
 tuticorinnetwork

0 comments:

Post a Comment