கிராம நிர்வாக அலுவலர் தேர்விற்கான(30 Sep 2012) முடிவு

Posted by aranthairaja



தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தில் கிராம நிர்வாக அலுவலர் தேர்விற்கான முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 30 - ம் நாள் நடந்த VAO (கிராம நிர்வாக அலுவலர்) தேர்விற்கான தேர்வு முடிவு தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதிய நபர்கள் தங்களது தேர்வு எண்ணை முடிவு வெளியிட்டுள்ள எண்ணோடு ஒப்பிட்டு பார்த்து தங்களது தேர்வு முடிவினை உறுதிபடுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தேர்வு முடிவு.....................................................................Click Here

கனவு

Posted by aranthairaja


இரண்டு இமைகளும் 
இதழ்பதித் ததனால்....
இரவு என்றொரு
மலர் மலர்ந்ததினால்....
மனமெனும் வலைக்குள் 
நீ விழுந்ததினால்.......
நினைவுகள் நிஜங்களின் 
வேர் அருத்ததினால்.....
என் கரங்களின் அணைப்பில் 
நீ இருந்ததினால்.....
இதை கனவென்று உணர்ந்தாலும்
கவிதையாய் மலர்ந்தேன்

தீபாவளி

Posted by aranthairaja




நகரங்களில் குடிபெயர்ந்தவர்களின் ஒரு வருட சேமிப்பு...

வறியவர்களுக்கு சென்ற வருட கடனை அடைத்த மகிழ்ச்யோடு புதியகடன்காரர்களாய் பதவியேற்பு...

குழந்தைகளுக்கு புத்தாடை, வெடி, பலகாரம்....

மாணவர்களுக்கு நிறைய பணம் பள்ளிக்கூட விடுமுறையோடு...

கட்டாய எண்ணைக்குளியல்....  

வீட்டில் செய்த எண்ணெய்ப்பலகாரம்... 

பட்டென வெடித்துச்சிதறும் வெடிச்சத்தம்....

தீபாவளிக்குப்பின்  வெடிச்சத்தமாய் சிதறும் பணமும், மனமும்....

நிஜமாய் சொன்னால் என் குடும்பத்தவர் மகிழ்விற்காக நான் விரும்பி சுமக்கும் பாரம்....

அறிமுகம் - புதிய ஆகாஷ் -2 டேப்லட் பிசி ரூ.1130

Posted by aranthairaja


           குறைந்த விலையில் டேப்லட் பிசி வழங்கி ஆச்சர்யத்தில் ஆழ்த்திய ஆகாஷ் டேப்லட் பிசி தற்போது தனது மேம்படுத்தப்பட்ட அடுத்த பதிப்பை வெளியிட்டுள்ளது. இதனை நமது மதிப்பிற்குரிய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அறிமுகம் செய்துவைத்தார்.

          மேம்படுத்தப்பட்ட இவ்வகை ஆகாஷ் டேப்லட் பிசியானது முதலில் மாணவர்களுக்கு அரசின் 50 % மானிய விலையான ரூ.1130 கு கிடைக்கும் என்பதே இதன் சிறப்பாகும். இந்தியாவில் மிகக்குறைந்த விலையில் கிடைக்கும் டேப்லட் பிசி இதுவேயாகும். முதலில் இஞ்சினியரிங் கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்கலைகழக மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. இதன் பிராசசர் வேகம் 1 Ghz , 512MB Ram , மற்றும் 7  இன்ச்  தொடுதிரை வசதியும் 3 மணிநேர பேட்டரி பவர் வசதியும் கொண்டதாக உள்ளது.

இந்த ஆகாஷ்-2 வை IIT பாம்பே C - CAD -ன் ஆதரவுடன் உருவாக்கியுள்ளது.

         இந்த ஆகாஷ் 2 - ன் அடக்க விலை ரூ.2263 . இதை அரசு இவ்விலைக்கு பெற்று அதற்கு 50 % மானியம் வழங்கி ரூ.1130  -கு மாணவர்களுக்கு வழங்குகிறது என்று டேட்டா வைன்ட் -ன் CEO  திரு சுனித் தூளி தெரிவித்துள்ளார்.

          முதலில் ஒருலட்சம் டேப்லட் பிசிக்கல் பொறியியல் கல்லுரி மாணவர்கள் மற்றும் பல்கலை மாணவர்களுக்கும் வழங்கப்படும். பின் மற்ற மாணவர்களுக்கு வழங்கப்படும். அடுத்த 5 அல்லது 6 ஆண்டுகளில் சுமார் 22 கோடி மாணவர்களுக்கு இச்சாதனம் வழங்கக்கப்படும்.

           முதல் கட்டமாக இவ்வாரத்தில் 20000 டேப்லட் பிசி வழங்கப்பட உள்ளது. இது லினக்ஸ் இயங்கு தளத்திலும் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted by aranthairaja

                  



                கூகுல் ஆட்சென்ஸ் வெப்சைட், பிளாக், யூடியுப் ஆகியவை மூலமாக வருமானம் ஈட்டித்தரக்கூடிய ஒரே சிறந்த ஆன்லைன் பிசினஸ் நிறுவனம்.


             கூகுள் ஆட்சென்ஸ் நிறுவனமானது மற்ற நிறுவனங்களிடமிருந்து அவர்களின் விளம்பரங்களை வாங்கி அதை நமது பிளாக், வெப்சைட், யூடியுப் ஆகியவற்றில்  விளம்பரப்படுத்தி வரும் வருமானத்தில் நமக்கும் ஒரு பங்காக பணம் தருகிறது என்பது அனைவரும் அறிந்ததே...

             இவர்கள் இந்த சேவையை தற்போது உலக அளவில் 34மொழிகளில் வழங்குகிறார்கள் என்பது தெரியுமா...  இதோ அந்த மொழிகளின் பட்டியல் .....    ( நமது மொழிதான் இல்லை)


                                                         
 ArabicGermanPortuguese
BulgarianGreekRomanian
Chinese (simplified)HebrewRussian
Chinese (traditional)HungarianSerbian
CroatianIndonesianSlovak
CzechItalianSlovenian *
DanishJapaneseSpanish
DutchKoreanSwedish
EnglishLatvianThai
Estonian *LithuanianTurkish
FinnishPolishUkrainian
FrenchNorwegian

கிராம நிர்வாக அலுவலர் தேர்வுபெற்றோர் பட்டியல் - VAO EXAM RESULT

Posted by aranthairaja

         இன்று காலை கிராம நிர்வாக அலுவலர் தேர்விற்கான(TNPSC  V .A .O ) முடிவுகளை தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அந்த தேர்வுபெற்றோர் பட்டியலை காண இங்கே கிளிக் செய்யவும்.

தொழிற்கல்விக்கான தேர்வு முடிவு 2011

Posted by aranthairaja



 
இன்று காலை முதல் தொழிற்கல்விக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. தேவைப்படுவோர் இங்கே க்ளிக் செய்யவும்.

http://intradote.tn.nic.in/Default.asp