இன்றைய ஐ.பி.எல் போட்டியில் சற்று முன்பு முடிந்த போட்டியில் கிங்ஸ் ரைடர் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் அணி வென்றுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாட இருக்கிறது. இப்போட்டியை நேரடியாக காண இங்கே கிளிக் செய்யவும்.
நேரடி ஒளிபரப்பு.........................
இன்னும் சற்று நேரத்தில் IPL - ன் T20 சரவெடி துவங்க உள்ளது. இப்போட்டியானது சென்னை சூப்பர் கிங்ஸ் -கும் கொச்சி டஸ்கர் அணிக்கும் கொச்சியில் நடக்க உள்ளது. இதுவரை மூன்று விளையாட்டுகளில் சென்னை அணி இரண்டு முறை வெற்றியும், ஒருமுறை தோல்வியும் அடைந்துள்ளது. கொச்சி அணி இருமுறை தோல்வியும், ஒருமுறை ஜாம்பவான் மும்பை அணியையும் வென்றுள்ளது.
மேலும் இப்போட்டியானது கொச்சி டஸ்கர் அணியின் சொந்த மண்ணில் நடைபெறுவதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அணிக்கு மைக் ஹஸ்ஸியின் வரவு மேலும் பலப்படுத்தியுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் நடைபெற உள்ள இப்போட்டியை காண மிக முக்கிய விருந்தாளியான "மழை" என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இப்போட்டியை நேரடியாக சோனி செட் மேக்ஸ் ஒளிபரப்புகிறது. இப்போட்டியை இணைய வழியாக பார்க்க விரும்புபவர்கள் இங்கே கிளிக் செய்யவும்.
இன்னும் சற்று நேரத்தில் IPL - ன் T20 சரவெடி துவங்க உள்ளது. இப்போட்டியானது சென்னை சூப்பர் கிங்ஸ் -கும் கொச்சி டஸ்கர் அணிக்கும் கொச்சியில் நடக்க உள்ளது. இதுவரை மூன்று விளையாட்டுகளில் சென்னை அணி இரண்டு முறை வெற்றியும், ஒருமுறை தோல்வியும் அடைந்துள்ளது. கொச்சி அணி இருமுறை தோல்வியும், ஒருமுறை ஜாம்பவான் மும்பை அணியையும் வென்றுள்ளது.
மேலும் இப்போட்டியானது கொச்சி டஸ்கர் அணியின் சொந்த மண்ணில் நடைபெறுவதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அணிக்கு மைக் ஹஸ்ஸியின் வரவு மேலும் பலப்படுத்தியுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் நடைபெற உள்ள இப்போட்டியை காண மிக முக்கிய விருந்தாளியான "மழை" என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இப்போட்டியை நேரடியாக சோனி செட் மேக்ஸ் ஒளிபரப்புகிறது. இப்போட்டியை இணைய வழியாக பார்க்க விரும்புபவர்கள் இங்கே கிளிக் செய்யவும்.
ஐ.பி.எல். நேரடி ஒலிபரப்பு...
இன்று சென்னை சூப்பர் கிங்ஸ்-கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த விழாவை காண காத்திருக்கும் அனைவருக்கும் ஒரு இனிய செய்தி. இவ்விழாவை நேரடி ஒளிபரப்பாக காண்பிக்கிறது இந்தியாடைம்ஸ். அனைவரின் எதிர்பார்ப்பும் சென்னை அணிமேல்தான் உள்ளது. இன்னும் சற்று நேரத்தில் பார்க்கலாம்.
இன்று சென்னை சூப்பர் கிங்ஸ்-கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த விழாவை காண காத்திருக்கும் அனைவருக்கும் ஒரு இனிய செய்தி. இவ்விழாவை நேரடி ஒளிபரப்பாக காண்பிக்கிறது இந்தியாடைம்ஸ். அனைவரின் எதிர்பார்ப்பும் சென்னை அணிமேல்தான் உள்ளது. இன்னும் சற்று நேரத்தில் பார்க்கலாம்.
காவிய நாயகி கண்ணகி
கற்புக்கரசி என்று சொன்னதும் சட்டென்று நினைவுக்கு வருபவள் கண்ணகி. இவளுக்கு தமிழக கேரளா எல்லையிலுள்ள மங்கள தேவியில் கோவில் உள்ளது. இங்கு கண்ணகி தெய்வமாகவே வணங்கப்படுகிறாள்.
இந்த கோவில் உருவான கதை.
மாதவியிடம் சேர்த்துவைத்த பொன், பொருளையெல்லாம் இழந்த கண்ணகியின் கணவன் கோவலன், மதுரைக்கு பொருள் தேட வந்தான். கண்ணகியின் மாணிக்கப் பரல்கள் கொண்ட காற்சிலம்பை விற்கச் சென்ற இடத்தில், 'அரசியின் காற்சிலம்பை திருடி வந்துவிட்டான் ' என்று குற்றம் சாட்டப்பட்டு, மனனின் காவலர்களால் கொலை செய்யப்பட்டான்.

வெகுண்டெழுந்த கண்ணகி பாண்டிய மன்னனிடம் முறையிட்டால். தனது மற்றொரு காற்சிலம்பை, மன்னனின் முன்பு தரையில் வீசி உடைத்தெறிந்து, அதில் உள்ள பரல்கள் மாணிக்கங்கள் என்றும், பாண்டிமா தேவி கார்சிலம்பின் பரல்கள் முத்துக்கள் என்றும் கூறி, தனது கணவன் கள்வன் அல்ல என்பதை நிரூபித்தால். நீதி தவறிய மன்னன் உயிரை விடுகிறான். அதை பார்த்து பாண்டிமாதேவியும் உயிர் துறக்கிறாள்.
ஆனால் கோபம் தணியாத கண்ணகியின் கோப அக்னி மதுரை நகரையே தீக்கு இரையாக்கியது என்கிறார், சிலப்பதிகாரம் தந்த இளங்கோவடிகள்.
மதுரையை எரித்த பிறகு, மேற்கு திசை நோக்கி பயனமானால் கண்ணகி. அன்றைய சேரநாட்டின் மலைப்பகுதியான இன்றைய மேற்கு தொடர்ச்சி மலையை அடைந்து, அங்குள்ள வேங்கை மரத்தடியில் சோர்ந்துபோய் அமர்ந்தால். 14 நாட்களுக்கு பிறகு, கொலைசெய்யப்பட்ட கோவலன் புஷ்க விமானத்தில் அங்குவந்து அவளை தன்னுடன் அழைத்துச் சென்றான். இதை பார்த்த மலைவாழ் மக்கள், ஒருமுறை மலைவளம் காணவந்த சேரன் செங்குட்டுவனிடம் அதுபற்றி கூறினார்கள். கண்ணகிபற்றி மேலும் அறிய ஆவல் கொண்ட செங்குட்டுவன், தனது அரசவை புலவர் சீத்தலை சாத்தனாரிடம் அதுபற்றி கேட்க... அவர் நடந்த சம்பவத்தை அரசனுக்கு விளக்கினார்.
கண்ணகியின் வரலாற்றை கேட்டு வியந்த செங்குட்டுவன், அவளுக்கு சிலைவடித்து ஒரு கோவிலும் எழுப்ப தீர்மானித்தான்.அதையொட்டி கண்ணகிக்கு சிலைவடிக்க இமயமலையிலிருந்து கல் கொண்டு வரப்பட்டது. கோவிலும் எழுப்பப்பட்டது. அந்த கோவில் தான் இன்றைய மங்கள தேவி கண்ணகி கோவில்.
தமிழக கேரள எல்லையில் கடல் மட்டத்திலிருந்து 4 ஆயிரத்து 380 அடி உயரத்தில் இக்கோவில் உள்ளது. கேரளா வணத்துறையின் கட்டுப்பாட்டில் இப்பகுதி உள்ளது.

சித்ரா பவுர்ணமி அன்று மட்டும் இந்த கோவிலுக்கு வந்து வணங்கி செல்லலாம். மற்ற நாட்களில் அனுமதி இல்லை.
தற்போது இந்த கோவில் சிதைந்து காணப்பட்டாலும், ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி அன்று மட்டும் பக்தர்கள் கூட்டத்தால் கலைகட்டிவிடுகிறது.
நன்றி தினத்தந்தி நாளிதழ்.
ஐ.பி.எல். t 20 ஆட்டங்கள் இப்பொழுது நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த போட்டியை நேரடியாக காணவிரும்புவோர் இங்கே click செய்யவும்.
இன்றைய ஐ.பி.எல்-லில் டெக்கான் சார்ஜர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல் அணிகள் மோதுகின்றன. போட்டியானது ஹைதராபாத்தில் நடைபெருகொண்டிருக்கிறது.
தற்போதைய நிலவரப்படி டெக்கான் சார்ஜர்ஸ் அணி முதலில் பேட் செய்து கொண்டிருக்கிறது. துவக்க ஆட்டக்காரரான சிக்கர் தவான் பதினைந்து பந்துகளை எதிர்கொண்டு ஒரு சிக்சர் இரண்டு பவுண்டரிகள் உட்பட இருபத்து நான்கு ரன்கள் எடுத்து பி.ஏ. சிங் பந்தில் அவுட்டாகி வெளியேறினார். அவருக்கு துணையாக இறங்கிய ஜாக்கி 28 பந்தில் மூன்று பவுண்டரிகளை அடித்து இருபத்து ஐந்து ரன்கள் எடுத்து வார்னே பாலில் அவுட் ஆடி வெளியேறினார்.
அடுத்ததாக வந்த குமார் சங்ககரா ரன் எதுவும் எடுக்காமல் திரிவேதி பாலில் அவுட் ஆனார். நான்காவதாக களம் இறங்கிய பரத் சிப்லி ஆறு ரன்களை மட்டும் எடுத்து அவரும் திரிவேதி பாலில் அவுட் ஆகி வெளியேறினார்.
டுமினியும் தற்போது வார்னே பந்தில் 14 ரன்கள் எடுத்து அவுட்டாகி வெளியேறினார்.
தற்போது துவாரகா ரவி தேஜாவும், டேனியல் கிறிஸ்டியன்-ம் களத்தில் உள்ளனர். இவர்கள் முறையே 6 , 5 ரன்கள் எடுத்துள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி டெக்கான் சார்ஜர்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 16 ஓவர்களில் 105 ரன்கள் எடுத்துள்ளது.
இந்த அணியின் ரன் விகிதத்தை பார்க்கும்போது என் கணிப்பின்படி 20 ஓவர்களில் 130 முதல் 150 ரன்கள் எடுக்கலாம் என்று நினைக்கிறேன்.
ஐ . பி. எல் ஒரு கண்ணோட்டம்.
இன்னும் சற்று நேரத்தில் ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா ஆரம்பமாக உள்ளது.
அதில் பங்கு பெரும் அணிகளின் விவரங்களை பாப்போம்.
இந்தியன் பிரீமியர் லீக் என்றவுடன் முதலில் நம் நினைவில் வருபவர் திருவாளர் லலித் மோடிதான். இந்த அமைப்பை உருவாக்கி அதை உலக அளவில் பிரபலம் அடையசெய்தவர் இவர்தான். ஆனால் சில ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய இவர் தற்போது லண்டனில் தலைமறைவாக வாழ்ந்து வருகிறார்.
இந்த ஐ.பி.எல். போட்டியானது 2008 -ம் ஆண்டு துவங்கப்பட்டு நடந்து வருகிறது. சென்ற மூன்று முறையும் எட்டு அணிகள் களத்தில் இருந்தன ... ஆனால் இந்த ஆண்டுமுதல் கூடுதலாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப்போட்டிக்காகன வீரர்களை அந்த அணிகளின் உரிமையாளர் ஏலத்தில் தன் அணிக்கு தேவையான வீரர்களை அதிக விலைகொடுத்து ஏலத்தில் எடுப்பார். இந்த ஏல உரிமமானது மூன்று ஆண்டுகளுக்கு செல்லும். மூன்று ஆண்டுகள் முடிவடைந்ததும் மீண்டும் மறு ஏல முறை வரும். அப்பொழுது வீரர்கள் அணிகளின் உரிமையாளர்களின் எண்ணங்களையும், தேவைகளையும் பொறுத்து அணி மாறுவார்கள்.
இப்போதும் மாறியிருக்கிறார்கள்-. கடந்த மூன்று முறையும் கொல்கத்தா அணிக்காக விளையாடிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியை எந்த அணி உரிமையாளரும் ஏலத்தில் எடுக்கவில்லை. அதனால் அவர் தற்போது நடக்கும் ஐ.பி.எல்-லில் பங்குபெற மாட்டார். கடந்த ஆண்டுகளில் டெல்லி அணிக்காக விளையாடிய கவுதம் கம்பீர் தற்போது கொல்கத்தா அணிக்கு ரூ.11 -கோடிக்கு வாங்கப்பட்டிருக்கிறார். இவரே அதிக தொகைக்கு ஏலம்போன வீரர் என்ற பெருமையையும் பெறுகிறார். ராஜஸ்தான் அணியிலிருந்து யூசுப்பதான் கொல்கத்தா அணிக்கும், டெக்கான் அணியிலிருந்து கில்க்ரிஸ்ட் பஞ்சாப் அணிக்கும், பஞ்சாப் அணியிலிருந்த சங்ககரா டெக்கான் அணிக்கும், பஞ்சாப் அணியிலிருந்த யுவராஜ் சிங் புதியதாக உதயமாகியுள்ள புனே அணியின் கேப்டனாகவும், சென்னை அணியிலிருந்த முரளிதரன் புதியதாக உதயமாகியுள்ள கொச்சின் அணிக்கும் மாற்றி ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை நடந்த போட்டிகள் விவரம்...
ஆண்டு ---- சாம்பியன் ----- 2 - வது இடம்.
2008 ---- ராஜஸ்தான் ----- சென்னை சூப்பர்கிங்க்ஸ்
2009 ---- டெக்கான் சார்ஜர்ஸ் ---- பெங்களுரு ராயல் சேலஞ்சர்ஸ்
2010 ---- சென்னை சூப்பர்கிங்க்ஸ் ---- மும்பை இந்தியன்ஸ்
அணிகள் மற்றும் அதில் விளையாடும் வீரர்கள் விவரம்.
1 ) சென்னை சூப்பர் கிங்க்ஸ்
டோனி (கேப்டன்), அனிருதா, அஸ்வின், பத்ரிநாத், ஜார்ஜ் பெய்லி, வெய்ன் பிராவோ, பாப் டு பிளிச்சிஸ், ஹில்பனாஸ்,மைக் ஹஸ்சி, ஜகாதி, ஜோகிந்தர் ஷர்மா, சூரஜ் ரன்தீவ், குலசேகரா, யோ மகேஷ், அல்பி மோர்கல், அபினவ் முகுந்த், சுரேஷ் ரெய்னா, விருத்திமான் சகா, டிம் சவூதி, ஸ்டைரிஸ், சுதீப் தியாகி, வாசுதேவதாஸ், கணபதி விக்னேஷ், முரளி விஜய், போளின்ஜர்.
2 ) மும்பை இந்தியன்ஸ்

சச்சின் டெண்டுல்கர்(கேப்டன்), அபு நெசிம், எய்டன் பிளிச்சார்ட், யுச்வேந்திரா சஹால், பெர்னாண்டோ, ஜேம்ஸ் பிராங்களின், ஹர்பஜன் சிங், ஹென்றிகஸ், சரூல் கன்வார், தவால் குல்கர்னி, மலிங்கா, அலி முர்டசா, முனாப்பட்டேல், கீரன் பொல்லார்ட்,அம்பத்தி ராய்டு, சதீஸ், ரோகித் ஷர்மா, சுமன் , பவான், சுயால், சைமண்ட்ஸ், ஆதித்யா டேர், சந்தோஷ் யாதவ், சூர்யகுமார் யாதவ்.
3 ) டெக்கான் சார்ஜர்ஸ்
சங்ககரா (கேப்டன்), ஆஷிஸ் ரெட்டி, ஆனந்த் ராஜன், அங்கி ஷர்மா, ஆகாஷ் பண்டாரி, பரத் சிப்லி, டேனியல் கிறிஸ்டியன், கேதார் தேவ்தார், ஷிகர் தவான், டுமினி, மான்பிரீத் கோணி, ஹர்மீத் சிங், இஷாங் ஜக்கி, மைக்கேல் லாம்ப், கிரிஸ் லின், இஷான் மல்கோத்ரா, அமித் மிஸ்ரா, பிரக்யான் ஓஜா, வர்கா ரவி தேஜா, ஜெயதேவ்ஷா,இஷாந்த் ஷர்மா, சன்னி சோகல்,ஸ்டெயின், தெரோன், கேமரூன் ஒயிட், அர்ஜூன் யாதவ்.
4 ) பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்
டேனியல் வேட்டேரி(கேப்டன்), மேயங் அகர்வால், ஸ்ரீநாத் அரவிந்த், அருண் கார்த்திக், பி.என்.பரத், ராஜீவ் பாதகள், டிவில்லியர்ஸ், தில்ஷான், நுவான் பிரதீப், முரளிதரன் கவுதம், முகமது கைப், அப்ரார் காசி, ஜாகீர்கான், விராட் கோக்லி, லாங்வெல்த், அபிமன்யு மிதுன், திரக் நேனஸ், ரியான் நினான், ஆசாத் பதான், லுக் போமர்ச்பாச், புஜாரா,, ரிலி ரோஸ்சவ், சவுரப் திவாரி, ஜான் வாண்டர் வாத், ஜோதன் வான்டர்.
5 ) ராஜஸ்தான் ராயல்
வார்னே(கேப்டன்), அமித் சிங், அஸ்னோட்கர், ஸ்டுவர்ட் பின்னி, ஜோகன் போத்தா, தீபக் சகார், ஆங்கீத் சவான், ஆகாஷ் சோப்ரா, ஆதித்யா டோல், நயன் தோஷி,ராகுல் திராவிட், சமாத் பல்லா, பைய்ஸ் பசால், அசோக் மெனாரியா, சுமித் நார்வல், பங்கஜ் சிங், அமித் பணிக்கர், ரஹானே, அபிஷேக் இரவுத், தினேஷ் சலுன்கே, பினால் ஷா, ஷான் டேயிட், ராஸ் டெயிலர், சித்தார்த் திரிவேதி, ஷேன் வாட்சன், ஹரேன்திரா யாக்னிக்.
6 ) கிங்க்ஸ் லெவன் பஞ்சாப்
ஆடம் கில்கிறிஸ்ட்(கேப்டன்), லவ் அப்ளிஷ், அமித் யாதவ், பார்கவ் பாத், பிபுள் ஷர்மா, பியுஸ் சாவ்லா, சித்தார்த் சிட்னிஸ், பராஸ் டோக்ரா, ரியான் ஹாரிஸ், டேவிட் ஹஸ்சி, தினேஷ் கார்த்திக், பிரவீன் குமார், ரியான் மெக்லரண், விக்ரம்ஜீத் மாலிக், மந்தீப் சிங், ஷான் மார்ஸ், அபிஷேக் நாயர், நாதன் ரிம் மின்க்டன், நிதின் சைனி, சாலாப் ஸ்ரீவஸ்தவா, சன்னி சிங், பால் வல்தடி.
7 ) டெல்லி டேர்டெவில்ஸ்

ஷேவாக் (கேப்டன்), வருண் ஆரோன், அஜித் அகர்கர், டிராவிஸ் பிரட், ராபின் பிஸ்த், உண்முக் சந்த், அஜீத் சண்டிலா, அசோக் திண்டா, ஆரோன் பிஞ்ச, ராபர்ட் பிரைளின்க், ஜேம்ஸ் ஹோப்ஸ், காலின் இங்க்ராம், மெக்டோனால்ட், மோர்னே மோர்கல், ஷபாஸ் நதீம், யோகேஷ் நாகர், பிரசாந்த் நாயக், நமன் ஓஜா, இர்பான் பதான், ராஜேஷ் பவார், அவிஷ்கர் சால்வி, ஸ்ரீராம், வான்டர் மெர்வ், வேணுகோபால் ராவ், விகாஸ் மிஸ்ரா, கேத்யு வாட், டேவிட் வார்னர், தேஜஸ்வி யாதவ், உமேஷ் யாதவ், விவேக் யாதவ்.
8 ) கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கவுதம் கம்பீர்(கேப்டன்), சரப்ஜித் லாடா, பாலாஜி, ரசத் பாட்டியா, மன்விந்தர் பிஸ்லா, கோஸ்வாமி, பிராட் ஹேடின், இக்பால் அப்துல்லா, காலீஸ், பிரெட்லீ, இயான் மோர்கன், யூசுப் பதான், ஜேம்ஸ் பெட்டின்சன், பிரதீவ் சாங்க்வான், சாமி அகமது, சாகிப் அல்-ஹசன், லட்சுமி ரத்தன் சுக்லா,ரியான் டென் டாஸ்சாட், மனோஜ் திவாரி, ஜெயதவ் உனட்கட்.
9 ) புனே வாரியர்ஸ்
யுவராஜ் சிங்(கேப்டன்), இம்தியாஸ் அகமது, எக்லைவர் திவேதி, பெர்குசன், கணேஷ் கேக்வாட், ஹர்பிரீத் சிங், தீரஜ் ஜாதவ், அபிஷேக் ஜுன்ஜுன்வாலா, கம்ரன்கான், முரளி கார்த்திக், ஹர்ஷாத், காடிவாலே, புவனேஸ்வர் குமார், நாதன் மெக்கெல்லம், மிதுன் மன்ஹாஸ், மிட்ஷெல் மார்ஸ், மேத்யுஸ், மோனிஸ் மிஸ்ரா, ஸ்ரீகாந்த் முண்டே, ஆஷிஸ் நெஹ்ரா, டிம் பெய்ன், மனீஷ் பாண்டே, வெய்ன் பார்னல், சச்சின் ரானா, ஜெஸ்சி ரைடர், ராகுல் ஷர்மா, சுமித், ஜெரோம் டைலர், அல்போன்ஸா தமஸ், ராபின் உத்தப்பா, ஸ்ரீகாந்த் வாக்.
10 ) கொச்சி டஸ்கர்ஸ்
மஹேலா ஜெயவர்தனே(கேப்டன்) அகில், தீபக் சவுக்லே, ஞானஸ்வரா ராவ், ரைபி ஹோம்பாஸ், ஜான் ஹெச்டிங்க்ஸ், பிராட் ஹாட்ஜ், ரவீந்திர ஜடேஜா, கெதார் ஜாதவ், மைகேல் கிளைஞர், வி.வி.எஸ். லட்சுமணன், பிரண்டன் மெக்கல்லம்,சந்தன்மதன், சுஷத் மராத்தே, முரளிதரன்,ஸ்டீவ் ஒ கீபே, பிரசாந்த் பத்மநாபன், பார்த்தீவ் பட்டேல், திசரா பெரேரா, ரமேஷ் பவார், ஓவைஸ் ஷா, ஆர்.பி.சிங், ஸ்டீவன் சுமித், ஸ்ரீசாந்த், தன்மை ஸ்ரீவஸ்தவா, வினய்குமார், யச்பால் சிங்.
குறையும் சர்க்கரை உறுதியாய்!!
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல் - குறள்.
தற்போது அதிகமாகி வரும் சர்க்கரை நோய் பற்றி தினமணி மருத்துவமலர் ( 2001) கூறிய சில கருத்துக்களை இங்கு தொகுத்துத் தந்துள்ளேன்.
மக்களிடம் சர்க்கரை நோய் உள்பட எந்த நோயாக இருந்தாலும் அது குறித்த விழிப்புணர்வு அவசியம். இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக சர்க்கரை நோய்
குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.
சர்க்கரை நோய்ச் சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமனைகளில் சர்க்கரை நோய்க் கல்வித் துறை என்ற தனிப் பிரிவே செயல்படுகிறது. சர்க்கரை நோயாளிகளின் மாத்திரை அளவு குறைய வேண்டுமென்றால் தினமும் நடைப் பயிற்சி, உடற்பயிற்சி,செய்யவேண்டும்.இப்படி செய்தால் உடலில் உள்ள இன்சுசிலின் நன்றாக வேலை செய்யும்.ரத்தஓட்டம் அதிகரிக்கும், உடல் எடை இயல்பான அளவுக்குக் குறையும், இதயத்துக்குத் தீமை செய்யும் கெட்ட கொலஸ்டரால் (எல்டிஎல்) குறைக்கும்,நல்லகொலஸ்டரால்(எச்டிஎல்)
அளவை அதிகரிக்கிறது, மன அழுத்தம் குறையும், நன்றாக தூக்கம் வரும்.உணவு எளிதில் ஜீரணமாகும். மொத்தத்தில் வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும்.
உடற்பயிற்சிகளைத் தொடங்குவதற்கு முன்பு 5 முதல் 10 நிமிஷங்கள் உங்களைத் தயார்ப் ப்டுத்திக் கொள்ளுங்கள். இதேபோன்று உடற்பயிற்சியை முடித்தவுடன் 5 முதல் 10 நிமிஷங்கள் இளைப்பாறுங்கள்.
தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் வாக்கிங் செல்லுங்கள். முடிந்தவரை வேகமாக நடக்க முயற்சி செய்யுங்கள். நடந்து செல்லும்போது நீண்ட வழியையே தேர்வு செய்யுங்கள். லிஃப்ட்டில் செல்லாமல் மாடிக்குப்படி ஏறிச்செல்லுங்கள். கடைக்குச் செல்லும் போதுவாகனங்களைச் சிறிது தொலைவிலே நிறுத்திவிட்டு மீதித் தொலைவை நடந்து செல்லுங்கள்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் :
தாழ் சர்க்கரை நிலை காரணமாகத் தலை சுற்றல், மயக்கம் ஏற்படலாம் என்பதால் சர்க்கரை நோயாளிகள்
கடைப் பிடிக்கவேண்டியவை:
கையில் எப்போதும் சாக்லேட்,மிட்டாய் வைத்துக் கொள்ளுங்கள். சர்க்கரை நோய் அடையாள அட்டையை எப்போதும் சட்டைப் பாக்கெட்டில் வைத்திருங்கள். உடற்பயிற்சியின்போது நெஞ்சில் வலி அல்லது அசௌகரியம் ஏற்பட்டால் உடனடியாக உடற்பயிற்சியை நிறுத்திவிடுங்கள்.
இவ்வாறு அம்மலர் கூறுகிறது.
இனி, வெண்டைக்காய் விஷயத்திற்கு வருகிறேன்.
தமிழ் நாடு ஓய்வுபெற்ற கல்லூரி ஆசிரியர் கழக ஒன்பதாவது மாநில மாநாட்டு மலரில் வெண்டைக்காய் பற்றி Dr. N.செல்லையா அவர்கள் எழுதி இதைப் படித்தவர்கள் நகல் எடுத்துப் பலருக்கும் கொடுத்தால் பெரும் தொண்டு!
தேவைப் பட்டவர்கள் கேட்டுப் பின்பற்றிப் பயன் அடைந்தால் நல வாழ்வு என்று எழுதியிருந்தார். அதை நான் இங்கு தருகிறேன். நீங்களும் இதைப் படித்து மற்றவர்களுக்கு சொல்லலாம்.
// ஒரு வெண்டைக்காயை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் தலையையும், நுனியையும் வெட்டி எறிந்துவிடுங்கள். மீதியுள்ள காயை இரண்டு அல்லது மூன்று துண்டங்களாக நறுக்கிக்கொள்ளுங்கள். இரவு படுக்கப் போகும் முன் அரை டம்ளர் தண்ணீரில் அதை ஊறப்போடுங்கள் .காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் முதல் வேலையாக வெண்டைக்காய் துண்டங்களை வெளியே எடுத்துப் போட்டுவிட்டு அந்த தண்ணீரைக் குடியுங்கள். (குறைந்தது ஒரு மணி நேரம் காபி, டீ வேறு எதுவும் அருந்த வேண்டாம்.)
எதற்கு இது?
இப்படிக் குடித்து வந்தால் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இரத்தத்தில் உள்ள ச்ர்க்கரை இரண்டே வாரங்களில் மளமள என்று இறங்கிவிடும் என திரு.பி.எஸ் பஞ்சநாதன் அவர்கள் தன் நண்பர் புகழ்மிக்க எழுத்தாளர் திரு.ரா.கி.ரங்கராஜன்
அவர்களுக்கு மின் அஞ்சல் அனுப்பியுள்ளார்.
இதனை திரு.ரா.கி.ர அண்ணாநகர் டைம்ஸ் பத்திரிக்கையில் நாலு மூலைப் பகுதியில் வெள்யிட்டுள்ளார். அப்பத்திரிக்கைக் குறிப்பில் மேலும் கூறியுள்ள செய்திகள் யாவை தெரியுமா? இதோ: தன் சர்க்கரை லெவல் இற்ங்கிவிட்டதாகவும் தன் சகோதரி இன்சுசிலின் ஊசி போட்டுக்கொள்வதை நிறுத்தி விட்டதாக்வும் இப்பொழுது அவர்கள் பழம், ஐஸ்கிரீம் எல்லாவற்றையும் சாப்பிடுகிறார்கள் எனவும் இன்சுலின் பக்கம் போவதில்லை எனவும் திரு.பி.எஸ்.பஞ்சநாதன் தெரிவித்துள்ளார். தினம் ஒரு வெண்டைக்காய் தானே செலவு.
திரு. ரா.கி. ரங்கராஜன் அவர்கள் மேலும் எழுதியுள்ளது:
நானும் என் ம்னைவியும் நீரிழிவு நோயளிகள்தான். 190 மிலிகிராமுக்கும் சற்று மேலோ, கீழோ இருந்து வருகிறது. சில் சமயங்களில் 230 வரை எகிரி விடும்
நண்பர் பஞ்சநாதனின் இமெயில் கிடைத்த மறுதினம் முதல் இரவில் வெண்டைக்காய் தண்ணீர் வைத்து காலையில் குடித்து வருகிறோம், 15 நாட்கள் சென்றபின் இரத்தப்பரிசோதனை செய்து பார்த்தபோது என்ன
ஆச்சிரியம்! எனக்கு 60 இறங்கி இருக்கிறது என் மனைவிக்கு 30 இறங்கி இருக்கிறது. புதிதாக ஏதாவது மாத்திரை மருந்து சாப்பிட்டோமா என்றால்
அறவே கிடையாது. பல வருடங்களாக 3 வேளைகளும் எதை விழுங்கி வருகிறோமோ அதே மாத்திரைகள்தாம். உணவில் கட்டுப்பாடா என்றால் புதிதாக அப்படி ஒன்றும் இல்லை. வாடிக்கையான உணவுதான்.
ஆகவே இந்த அதிசயம் வெண்டைக்காய் வைத்தியத்தினால் மட்டுமே நடந்திருக்கிறது என்று திடமாக நம்புகிறேன். இந்த மருந்தைத் தொடர்ந்து அருந்தவும் தீர்மானித்திருக்கிறேன்.இதைப் படிப்பவர்கள் பின்பற்றிப் பாருங்கள்.
பலன் இல்லை என்றால் விட்டுவிடுங்கள். செலவே இல்லாத வைத்தியம்.ஆனால் ஒன்று,வெண்டைக்காய்த் தண்ணீர் ஆகையால் வாயில் அரை நிமிடம் கொளகொள என்றிருக்கும். கூடவே ஒரு மடங்கு சாதா தண்ணீர்
குடித்தால் அந்த உணர்வும் அகன்றுவிடும். அல்லது ஒரு திராட்சைப் பழத்தை மெல்லலாம்.
இந்த வெண்டைக்காய்த் தண்ணீரை எவ்வளவு நாள் அருந்தி வரவேண்டும்? எப்போது நிறுத்துவது? தற்சமயம் சாப்பிட்டு வரும் மாத்திரைகளை நிறுத்தலாமா?ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்து விட்டால் அபாயம் ஆயிற்றே? இப்படி எல்லாம் பல அன்பர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளார்கள்.
மாதத்திற்கொருமுறை ரத்தப் பரிசோதனை செய்து கொள்ளுவது அவசியம். அந்த ரிபோர்ட்டைத் தகுந்த டாக்டரிடம் காட்டுங்கள். வெண்டைக்கை வைத்தியத்தைத் தொடரலாமா?அல்லது தற்காலிகமாக நிறுத்திக் கொள்ளலாமா? என அவரிடம் கேளுங்கள். அவர் சொல்கிறபடி செய்யுங்கள்-என அறிவுறுத்தியுள்ளார் திரு.ரா.கி.ர அவர்கள்.
நன்றி: திரு.தி.எஸ்.பஞ்சநாதன்,
எழுத்தாளர் திரு.ரா.கி. ரங்கராஜன (இ.மெயில் முகவரி:rankamala @ yahoo.co.in)
அண்ணா நகர் டைம்ஸ்-ஏப்ரல் 19-25,2009 மற்றும்
ஏப்ரல் 26-மே2,2009.//
நம் வீட்டுத் தோட்டங்களில் இயற்கை உரமிட்ட வெண்டைக்காய் கிடைத்தால் இன்னமும் நல்லது.
வாழ்க நலமுடன். வாழ்க வளமுடன்

இந்தியாவை தோற்கடிப்போம் என்று இலங்கை கிரிகெட் அணியின் பயிற்சியாளர் ட்ரெவர் பேலஸ் உறுதியுடன் கூறியுள்ளார். இதுவரை நடந்த உலககோப்பை போட்டியில் இறுதிபோட்டிக்கு இந்தியா மூன்று முறையும் இலங்கை மூன்று முறையும் பங்கேற்றுள்ளது. இரண்டு நாடுகளும் தலா ஒருமுறை கோப்பையை வென்றுள்ளது. இப்போட்டியில் வென்றால் அவ்வெற்றியை சுழற்பந்து வீச்சாளர் முரளிதரனுக்கு சமர்பிப்பதாக இலங்கையும், சச்சினுக்கு சமர்பிப்பதாக இந்தியாவும் கூறியுள்ளது.
இப்போட்டிக்காக இரு அணிகளும் மிக கடுமையாக வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்திய தரப்பில் ஆசிஷ் நெகராவிற்கு பதிலாக தமிழகத்தை சேர்ந்த அஸ்வினும், இலங்கை அணியில் மேதிவ்ஸ் காயம் காரணமாக இடம்பெற மாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக இப்போட்டிக்கு மும்பையில் வரலாறு காணாத எட்டு அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மைதானத்திற்கு மேலே விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி பறக்கும் விமானத்தை சுட்டுத்தள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உள்ளே தண்ணீர் பாட்டில்களோ குளிர்பான பாட்டில்களோ கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. போட்டிக்கான பாதுகாப்பு பணிகளை மகாராஷ்ரா உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டில் முன்னிற்று பார்வையிடுகிறார்.
நேரடி ஒளிபரப்பை காண இங்கே க்ளிக் செய்யவும்......
Subscribe to:
Posts (Atom)